பணமோசடி வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. கே டி சிங்கை அமலாக்கத்துறை இயக்குநரகம் கைது செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளன.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) பிரிவுகளின் கீழ் சிங் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு பணமோசடி வழக்குகள் தொடர்பாக சிங் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை அமலாக்கத்துறை இயக்குநரகம் 2019 செப்டம்பரிலிருந்து தேடியது.
சிங் அல்கெமிஸ்ட் குழுவின் தலைவராக இருந்தபோது, அவர் 2012 இல் பதவியை ராஜினாமா செய்தார். அது தவிர, அவர் எமரிட்டஸ் வணிகக் குழுவின் தலைவர் மற்றும் நிறுவனர் என்று கூறப்படுகிறது.
கே.டி சிக் ஏப்ரல் 2014 இல் திரிணமூல் காங்கிரஸ் சார்பாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் ஊழல் வழக்கில் சிக்கிய பின்னர் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிந்தது.
மேலும் சிங், சிலகாலமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கட்சி விவகாரங்களில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
37 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago