தெலங்கானா சட்டப்பேரவையில் விவசாய வங்கி கடன் ரத்து குறித்து விவாதம் நடத்தக் கோரி அமளி யில் ஈடுபட்ட தெலுங்கு தேசம், காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் கள் 32 பேரை பேரவைத் தலைவர் தற்காலிக நீக்கம் செய்தார்.
மூன்று நாள் விடுமுறைக்குப் பின் தெலங்கானா சட்டப்பேரவை நேற்று கூடியது. அவை தொடங்கியதும், விவசாயிகளின் வங்கி கடன் ரத்து குறித்து விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதற்கு பேரவைத் தலைவர் மதுசூதனாச்சாரி மறுத்து விட்டார். விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து 2 நாட்கள் விவாதம் நடைபெற்றதால், மற்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டுமென அவர் தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ள வில்லை. மேலும் பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, அவையை நடத்தவிடாமல் தடுக்கும் எதிர்க்கட்சியினரை தற்காலிக நீக்கம் செய்ய வேண்டுமென அமைச்சர் ஹரீஷ் ராவ் பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தார். அதன்படி காங்கிரஸ், தெலுங்கு தேசம், பாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 32 உறுப்பினர்களை பேரவைத் தலைவர் தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago