திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இனி `ஜருகண்டி’ இல்லை: பக்தர்களை அன்பாக நடத்த பயிற்சி

By என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்களை ஜருகண்டி ஜருகண்டி என்று தள்ளிவிடாமல் அன்புடன் நடந்து கொள்ள ஸ்ரீவாரி சேவகர்களுக்கு தனி பயிற்சி அளிக்க உள்ளது என தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் தெரிவித்தார்.

திருப்பதி திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் மாதந் தோறும் முதல் வெள்ளிக்கிழமை தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறைகள் கேட்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது. இதில் பக்தர்கள் பலர் பொதுவான குறைகளை கூறினர். பக்தர்கள் சிலர், `கோயிலுக்குள் செல்லும்போது அங்குள்ள ஊழியர்கள், ஸ்ரீவாரி சேவகர்கள், சுவாமியை பார்க்க முடியாத வகையில், “ஜருகண்டி, ஜருகண்டி” என தள்ளி விடுகின்றனர். இதனால் பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் சுவாமியை சிறிது நேரம் கூட தரிசிக்க முடியாமல் மிகுந்த மன வருத்தம் அடைய நேரிடுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கேட்டு கொண்டனர்.

இதற்கு சாம்பசிவ ராவ் பதிலளிக்கும்போது, “ஏற்கெனவே பக்தர்களுக்கு சேவை செய்யும் ஸ்ரீவாரி சேவகர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இனி பக்தர்களை தள்ளாமல் “கோவிந்தா” என அன்புடன் கூறுமாறு அறிவுறுத்தப்படுவர். பக்தர்களை அன்பாக நடத்த பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.

முடிஏலத்தில் ரூ. 5.88 கோடி

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாக தலைமுடி காணிக்கை செலுத்து கின்றனர். இவைகளை தரம் பிரித்து இ-ஏலம் மூலம் தேவஸ்தானத்தினர் ஏலம் விடுகின்றனர்.

இதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்து வருகின்றது. நேற்று 44 ஆயிரத்து 800 கிலோ தலைமுடி, 6 பிரிவுகளாக பிரித்து ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் ரூ. 5.88 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்