வாகனங்களில் சாதி ஸ்டிக்கர்களை அகற்றும் நடவடிக்கை: 594 பேருக்கு நொய்டா போலீஸார் அபராதம்

By பிடிஐ

நொய்டாவில், சாதிப் பெயர்களை அடையாளம் காட்டும் ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டியிருந்த 594 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நொய்டா டெல்லிக்கு மிக அருகில் உள்ள ஒரு பகுதியாகும். இங்கு நேற்று சாலைகளில் சென்ற வாகனங்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அப்போது அவர்களது வாகனங்களில் இருந்த சாதிப் பெயர்களை அடையாளம் காட்டும் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டன.

இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

''வாகனங்களில் சாதிப் பெயர்களை அடையாளம் காட்டும் ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு சாலைகளில் செல்லக்கூடாது எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

நொய்டாவின் கவுதம் புத்தா நகர் காவல் ஆணையர் அலோக் சிங்கின் அறிவுறுத்தலின் பேரில் இதற்கான பிரச்சாரம் தொடங்கப்பட்டது. பிரச்சாரத்தின்போது வாகன ஓட்டிகளின் வாகனங்கள் சோதனை இடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று, 594 வாகன உரிமையாளர்களுக்கு அவர்கள் தங்கள் வாகனங்களில் சாதிகளை அடையாளம் காணும் ஸ்டிக்கர்கள் தவிர சாதிப்பெயர்கள் வண்ணம் தீட்டப்பட்டு இருந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது இதுபோன்ற அனைத்து ஸ்டிக்கர்களும் வண்ணப்பூச்சுகளும் அகற்றப்பட்டன.

சாலைப் போக்குவரத்து விதிகளை மீறி தங்கள் கார்கள் அல்லது மோட்டார் சைக்கிள்களில் சாதி அடையாளம் காணும் ஸ்டிக்கர்களை வைப்பதை எதிர்த்து மாவட்டக் காவல்துறை வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது''.

இவ்வாறு காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்