ஜனவரி 16ல் கரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கும்: பிரதமர் மோடி ட்வீட்

By ஏஎன்ஐ

வரும் ஜனவரி 16ம் தேதி முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாட்டில் கரோனா நிலவரம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "வரும் ஜனவரி 16ம் தேதி, நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கும்.

கரோனா எதிர்ப்புப் போராட்டத்தில் தேசம் முன்னெடுக்கும் இந்த நடவடிக்கை, மிக முக்கியமான மைல்கல். தடுப்பூசி வழங்குவதில் துணிச்சலான மருத்துவர்கள், முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்" எனப் பதிவிட்டுள்ளார்.

கரோனா தடுப்பூசி முதல்கட்ட நிகழ்வில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே கடந்த வாரமே சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனும் கரோனா தடுப்பூசியில் முன்களப் பணியாளர்களுக்கே முன்னுரிமை எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

8 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்