தமிழ்நாடு, புதுச்சேரி,காரைக்கால், கேரளா, மாஹேவில் வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் பரவலாக மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் இயல்பான வெப்பநிலை நிலவும். முதல் வாரத்திற்கான மழை அளவு: (ஜனவரி 07 முதல் 13 வரை): தென்கிழக்கு அரபிக் கடல், தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்இந்திய தீபகற்பப் பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி,காரைக்கால், கேரளா, மாஹேவில் வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் பரவலாக மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
» 18 கோடியைக் கடந்தது கரோனா பரிசோதனைகள்
» காகங்களுக்கும் பரவுகிறதா பறவைக் காய்ச்சல்: டெல்லியில் கொத்துகொத்தாக மடிந்து விழுந்த காகங்கள்
கடந்த 2020 அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக தென் இந்திய தீபகற்பத்தில் ஏற்பட்ட நிகழ்வு: தென் தீபகற்பத்தின் வானிலை ஆய்வு துணை பிரிவுகளான தமிழ்நாடு கடற்கரை ஆந்திரப்பிரதேசம் ராயலசீமா கேரளா, கர்நாடகா ஆகியவை கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) சுமார் 30% மழையைப் பெற்றுள்ளன. குறிப்பாக இந்த பருவ காலத்தில் தமிழ்நாட்டில் 48 சதவீத மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
42 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago