காகங்களுக்கும் பரவுகிறதா பறவைக் காய்ச்சல்: டெல்லியில் கொத்துகொத்தாக மடிந்து விழுந்த காகங்கள் 

By ஏஎன்ஐ

கேரளாவில் பறவைக் காய்ச்சல் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது டெல்லியில் காகங்கள் கொத்துகொத்தாக மடிந்து விழுவதால் அவற்றிற்கும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி மயூர் விஹார் பகுதி 3ல் உள்ள பூங்காவில் 17 காகங்களும், துவாரகாவில் உள்ள பூங்காவில் 2 காகங்களும், ஹஸ்தால் கிராமத்தில் 16 காகங்களும் இறந்து கிடந்தன.

அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. துணை முதல்வர் மணீஷ் சிசோதயா சம்பந்தப்பட்ட துறைகள் துரிதமாக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட காகங்களின் சடலங்கள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி அப்புறப்படுத்தப்பட்டன.

பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள விலங்கினங்களின் நோய்களுக்கான ஆராய்ச்சிக் கூடமான நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹை செக்யூரிட்டி அனிமல் டிசீஸ் மையத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்