தெலுங்கு தேசம் ஆட்சியில் இடிக்கப்பட்ட 9 கோயில்கள் கட்டுவதற்கு முதல்வர் ஜெகன் அடிக்கல்

By என்.மகேஷ்குமார்

கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியின் போது விஜயவாடாவில் இடிக்கப்பட்ட 9 கோயில்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று அடிக்கல் நாட்டினார்.

ஆந்திர மாநிலத்தில் இந்து கோயில்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தி வருவது தற்போது பெரும் அரசியல் பிரச்சினையை கிளப்பி உள்ளது. இது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு புதிய தலைவலியை உண்டாக்கி உள்ளது. சட்டம் ஒழுங்கு கெடும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஜெகன் அரசை கலைக்க வேண்டுமென ஆளுநருக்கு புகார் கொடுக்கும் அளவுக்கு இந்த பிரச்சினை தலைதூக்கி உள்ளது.

இந்நிலையில், தெலுங்கு தேசம் ஆட்சி காலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு விஜயவாடா பிரகாசம் அணைக்கட்டு பகுதியில் கிருஷ்ணா புஷ்கரம் சமயத்தில் இடிக்கப்பட்ட 9 இந்து கோயில்களை புதிதாக கட்ட முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும், கனக துர்க்கை அம்மன் கோயில் ரூ.77 கோடியில் அகலப்படுத்தும் பணிக்களுக்காகவும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்