உத்தரப்பிரதேசத்தின் பதாயுவின் கோயிலுக்கு வந்த பெண் கூட்டுப் பலாத்காரமாகி கொலை செய்யப்பட்டிருந்தார். இவ்வழக்கில் துப்பு அளிப்போருக்கு ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்ட முக்கியக் குற்றவாளியான சாது கைதாகி உள்ளார்.
உ.பி.யின் பதாயூ நகரின் மேவ்லி கிராமத்தின் சிவன் கோயிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 42 வயது பெண் சென்றிருந்தார். அங்கு பூசாரியாக இருந்த சாதுவான சத்யநாராயாணா தன் சகாக்களுடன் சேர்ந்து அப்பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது.
இதனால், படுகாயமடைந்த அப்பெண் பலியானதால் வழக்கு பதிவாகி விசாரிக்கப்படுகிறது. இப்பிரச்சனையில் உபியின் எதிர்கட்சிகள் பாஜக ஆளும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் மீது கடும் விமர்சனங்கள் செய்தனர்.
இதனிடையே, சாதுவின் இரண்டு சகாக்களான ஜஸ்பீர்சிங், வேத்ராம் என்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். முக்கியக்குற்றவாளி சாது சத்யநாராயணா, அக்கோயிலில் இருந்து தப்பித் தலைமறைவானார்.
இவரைப் பற்றி துப்பு அளிப்போருக்கு ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்டு ஐந்து சிறப்பு படைகள் அமைத்து தேடப்பட்டு வந்தார். இவர், அதே கிராமத்தின் ஒரு வீட்டில் ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இன்று கைதாகி உள்ளார்.
சாது சத்யநாராயணவிற்கு அடைக்கலம் அளித்ததாக அவ்வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். கூட்டுப் பலாத்காரம் மீதான புகாரை அப்பெண்ணின் குடும்பத்தாரிடம் ஏற்க மறுத்த ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் இருவர் மீதும் கூட தற்போது வழக்குகள் பதிவாகி உள்ளன. அங்கன்வாடி பணியாளரான அப்பெண்ணின் கணவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
இவரது உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்ய வேண்டி அப்பெண் சம்பவம் நடந்த அன்றி கோயிலுக்கு சென்றிருந்தார். அப்போது கோயிலுடன் இணைந்துள்ள சாது சத்யநாராயணாவின் ஆஸ்ரமத்தில் இந்த துயர சம்பவம் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
58 mins ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago