பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

காஷ்மீர் தொழில் வளர்ச்சிக்காக ரூ.28 ஆயிரம் கோடி; மக்கள் விருப்பங்களை பூர்த்தி செய்யும்: துணை நிலை ஆளுநர் நம்பிக்கை

பிடிஐ

ரூ.28 ஆயிரம் கோடியில் தொழில்துறைகளை மேம்படுத்துவது காஷ்மீர் மக்கள் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய வழிவகுக்கும் என துணை நிலை ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் தொழில் மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.28 ஆயிரம் கோடி ஒதுக்கி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட தேதி முதல் 2037ஆம் ஆண்டுக்குள் இந்நிதியை பயன்படுத்திக்கொள்ளலாம் அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீருக்கான புதிய தொழில்துறை மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு மேற்கொண்ட தொலைநோக்கு பார்வைகளின் ஒரு முக்கிய முடிவில் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.

அவ்வகையில் காஷ்மீரில் மொத்தம் ரூ .28,400 கோடி நிதியில் புதிய தொழில்துறை மேம்பாட்டு திட்டம் (ஐடிஎஸ்) உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிய முதலீடுகள் ஊக்குவிக்கப்படும். யூனியன் பிரதேசத்தின் தொலைதூர வட்டாரங்கள் வரை புதிய தொழில்கள் தொடங்கப்படும்.

பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியின் சகாப்தத்தை உருவாக்குவதற்கும், மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கும் இந்த தொழில் வளர்ச்சித் திட்டம் நீண்ட தூரம் பயணிக்கும்.

இவ்வாறு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT