உத்தரப் பிரதேசத்தில் மொகரம் பண்டிகையையொட்டிய ஊர்வலத்தில் கத்தி, வாள் போன்றவற்றை அனுமதிக்கக் கூடாது என இந்து அமைப்புகளில் ஒன்றான விஷ்வ இந்து மகா சங்கம் கோரியுள்ளது. இதற்காக, நேற்று ஆக்ராவின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று தர்ணா போராட்டம் நடத்தியது.
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான மொகரமின்போது ’தாஜியா’ எனப்படும் ஊர்வலங்கள் நடத்தப்படுவது வழக்கம். இதில், அவர்கள் தம் முன்னோர்கள் செய்த தியாகங்களை நினவு கூறும் வகையில், வாள், இரும்பு சங்கிலி போன்றவைகளை பயன்படுத்தி பல்வேறு வகை போர் வித்தைகள் காட்டுவது உண்டு.
இவற்றின் உதவியால் தம்மை தாமே காயப்படுத்தி கொள்வதுடன் ரத்தம் சிந்துவதையும் புண்ணியமாக கருதுவதும் வழக்கமாக உள்ளது. இதில், கத்தி, வாள், இரும்பு சங்கிலி போன்றவை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது எனக் கோரி தர்ணா போராட்டம் நடத்திய ஆக்ராவின் விஷ்வ இந்து மகா சங்கத்தினர், அது குறித்து மனு ஒன்றையும் மாவட்ட ஆட்சியர் பங்கஜ் குமாரிடம் அளித்தனர்.
இது குறித்துஅந்த அமைப்பின் தலைவரான சுமித் கட்டியார் கூறுகையில், ‘மொகரம் ஊர்வலங்களால் ஆக்ராவின் அமைதி கெடுகிறது. இதில் கலந்து கொள்ளும் சில சமூக விரோதிகள் டியூப் லைட்டுகளை சாலைகளில் போட்டு உடைக்கின்றனர். இதில், பயன்படுத்தப்படும் கத்தி, வாள், சங்கிலி போன்ற பயங்கர ஆயுதங்களால் காட்டப்படும் வித்தைகளை பார்க்கும் சிறுவர் மற்றும் பெண்கள் இடையே கிலியை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.’ எனக் கூறுகிறார்.
இந்துக்களின் ஸ்ரவண மாதங்களில் காவடிகளுடன் சிவன் கோயில்களை நோக்கி புனித நடைப்பயணம் செல்லும் போது ஊன்றுகோலாக கைத்தடிகளாகக் கம்புகளை எடுத்து செல்வது வழக்கம். கடந்த சில வருடங்களாக இந்த கைத்தடிகளால் கலவரம் உண்டாக்கப்படுவதாக அதற்கு உத்தரப் பிரதேச அரசு தடை விதித்தது. இதை தொடர்ந்து மொகரம் ஊர்வலங்களில் கத்தி, வாள் சங்கிலி போன்றவைகள் பயன்படுத்த தடை கோரப்படுவதாகக் கருதப்படுகிறது.
இது குறித்து ஆக்ராவின் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செய்தி தொடர்பாளரான பர்மேந்திரா ஜெயின், ‘விஷ்வ இந்து மகா சங்கம் எங்கள் அங்கீகாரம் பெற்ற அமைப்பு அல்ல. எனினும், அவர்கள் மொகரம் மீதான கோரிக்கை நியாயமானதே’ எனத் தெரிவித்துள்ளார்.
நவராத்ரி விரதத்தை முன்னிட்டு, விஷ்வ இந்து மகா சங்கம் மற்றும் தரம் ஜாக்ரன் மன்ச் ஆகிய இந்து அமைப்பினர், ஆக்ராவின் கோயில்கள் அருகில் உள்ள இறைச்சிக் கடைகளை மூடக் கோரி, கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி ஆர்பாட்டம் நடத்தி இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago