பூட்டான் சிங்கின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான பூட்டா சிங் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86.
நீண்டகாலம் பொதுவாழ்க்கையில் இருந்த பூட்டா சிங், 8 முறை எம்.பியாக இருந்து, 4 பிரதமர்களின் ஆட்சியில் அமைச்சராகவும், பல்வேறு முக்கியப் பொறுப்புகளிலும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்த பூட்டா சிங், கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே எய்ம்ஸ் மருத்துவமனையில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 7.10 மணிக்கு காலமானார் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். இன்று மாலை டெல்லி லோதி சாலையில் உள்ள இடுகாட்டில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
பூட்டான் சிங்கின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “அனுபவம் வாய்ந்த நிர்வாகியாகத் திகழ்ந்த பூட்டா சிங், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுத்தார். அன்னாரது மறைவினால் ஆழ்ந்த துயருற்றேன். அவரது குடும்பத்தார் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கல்கள்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago