இந்தியாவில் கரோனா: 5 மாநிலங்களில் மட்டும் 62 சதவீதத்தினர் பேர் பாதிப்பு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரில் 62 சதவீதத்தினர் கேரளா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.50 இலட்சமாகக் குறைந்துள்ளது (2,50,183). இது மொத்த பாதிப்பில் 2.43 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 19,079 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 22,926 பேர் புதிதாக குணமடைந்தனர். இந்தியாவில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரில் 62 சதவீதத்தினர் கேரளா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சர்வதேச அளவில் ஒப்பிடும் போது கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் 10 இலட்சம் மக்கள் தொகையில் தொற்றுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு (101). பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கடந்த 7 நாட்களில், 10 லட்சம் மக்கள் தொகையில் தொற்றுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99 இலட்சத்தைக் கடந்து (99,06,387), ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. குணமடைந்தோரின் வீதம் 96.12 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து 96,56,204 ஆக பதிவாகியுள்ளது.

புதிதாக குணமடைந்தவர்களில் 78.64 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக கேரளாவில் 5111 பேரும், மகாராஷ்டிராவில் 4279 பேரும், மேற்கு வங்காளத்தில் 1496 பேரும் குணமடைந்துள்ளனர்.

80.56 சதவீத புதிய தொற்றுக்கள் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது. கேரளாவில் 4991 பேரும், அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 3524 பேரும், மேற்கு வங்காளத்தில் 1153 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 224 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 75.45 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் 59 பேரும், மேற்கு வங்காளத்தில் 26 பேரும், கேரளாவில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்