பிஹார் தேர்தலில் போட்டியிடும் சிவசேனா, மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ் குமாரை பாராட்டியது, அதன் தோழமைக் கட்சியான பாஜகவுக்கு நெருடலை ஏற்படுத்துள்ளது.
மகராஷ்ட்ரா மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியான சிவசேனா, மத்தியில் பாஜக தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயக முன்னணியின் மூத்த உறுப்பினராக இடம்பெற்றுள்ளது. பிஹாரில் தமக்கு அதிக செல்வாக்கு இல்லாவிட்டாலும் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் 150 இடங்களில் போட்டியிடுகிறது.
தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான சஞ்சய் ரவுத், நிதிஷ் குமாரின் கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியில் நற்பணிகள் நடைபெற்றுள்ளதாகப் பாராட்டியுள்ளார்.
இது குறித்து பாட்னாவின் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ரவுத், "பிஹாரின் தேர்தல் துவங்கியது முதல் நான் அதன் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து வருகிறேன். அப்போது அப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை என்னால் எளிதாக அடையாளம் காண முடிந்தது. மாநிலம் முழுவதுமாக போதுமான சாலைகள் அமைந்துள்ளன. கிராமங்களிலும் மின்சார வசதிகள் கிடைத்துள்ளன" என்றார்.
சஞ்சய் ரவுத்தின் இந்த கருத்து கடந்த 10 ஆண்டுகளாக பிஹாரின் முதல்வராக இருக்கும் நிதிஷ் குமாருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இது, நிதிஷ் குமாரின் வளர்ச்சிப்பணிகளை தன் பிரச்சார மேடைகளில் கடுமையாக விமர்சனம் செய்து வரும் பாஜகவுக்கு தர்மசங்கடத்தை ஆழ்த்தி விட்டது. பிஹாரில் ஆண்டு காலம் ஆட்சி எனும் பெயரில் காட்டு தர்பார் நடத்தி வந்ததாகக் கருதப்படும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி அமைத்துள்ள நிதிஷ் பிஹாரை வளர்த்த முடியாது எனவும் மேடைகளில் பிரச்சாரம் செய்து வருகிறது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜகவின் பிஹார் மாநில செய்தி தொடர்பாளரான சஞ்சய் மயூக், 'பல வருடங்களாக பிஹாரில் அடையாளம் இன்றி தவிக்கிறது சிவசேனா. இது இந்த தேர்தலில் இந்தி மாநிலமான இங்கு கால் பதிக்க முயல்கிறது. இதன் தலைவர் நிதிஷை புகழ்ந்ததை பார்க்கும்போது அவர், பிஹாரில் தன் கட்சி மற்றும் முதல்வரை ஒரே நிலையில் வைத்திருப்பதை காட்டுகிறது' என்றார்.
கடந்த சில காலங்களாக பாஜக மற்றும் சிவசேனாவுடனான உறவில் சுமூகமான நிலை காணப்படவில்லை. கடந்த அக்டோபரில் நடைபெற்ற மகராஷ்ட்ரா சட்டப்பேரவை தேர்தலிலும் சிவசேனா, பாஜகவுடன் சேராமல் தனித்தே போட்டியிட்டது. பிஹாரில் நிதிஷால் முதல்வராக்கப்பட்ட ஜிதன் ராம் மாஞ்சி பதவி இறக்கப்பட்டபோது அவருக்கு பாஜக தர முயன்ற ஆதரவையும் கடுமையாக சிவசேனா விமர்சனம் செய்திருந்தது. இதில் மாஞ்சியை ஆதரித்து பாஜக பாவம் செய்வதாகவும், இது பிஹார் அரசியலின் கருப்பு காலமாகக் கருதப்படும் என்றும் கருத்து கூறி இருந்தது நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago