டெல்லியில் நிலவும் கடுமையானக் குளிரிலும் அசராமல் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. கடந்த ஒரு வாரத்தில் இவர்கள் எண்ணிக்கை, இருமடங்காக அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் 37 ஆவது நாளாகத் தொடர்கிறது. மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் வாபஸ் பெறுவது உள்ளிட்டப் பல கோரிக்கைகளை இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரையும் நடைபெற்ற ஆறுகட்டப் பேச்சுவார்த்தையில் போராட்டம் முடிவிற்கு வரவில்லை. எனினும், கடைசிக் கட்டப் பேச்சுவார்த்தையில் லேசான முன்னேற்றம் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசிற்கு கூடுதலான அழுத்தம் அளிக்கும் வகையில் விவசாயிகள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. இவர்கள் டெல்லியில் அதிகரித்து விட்டக் கடும் குளிரையும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
நேற்று முதல் டெல்லியில் உறைய வைக்கும் குளிர் வீசத் துவங்கி உள்ளது. 1.1 டிகிரி வரையிலான அளவில் வீசும் குளிரால் தம் வீட்டிலுள்ள பொதுமக்கள் பலரும் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
ஆனால், தம் வீடுகளை விட்டு சாலையின் ஓரங்களில் கூடாரம் அமைத்து போராடும் விவசாயிகள் குளிருக்கு அஞ்சியதாகத் தெரியவில்லை. இந்த விவசாயிகளின் டிராக்டர்கள் எண்ணிக்கையும் பெருகி விட்டன.
இதன் காரணமாக, டெல்லியின் எல்லைகளில் கூடுதலான சாலைகள் மறிக்கப்பட்டுள்ளன. டிக்ரி மற்றும் தன்ஸா எல்லைகளின் வழிகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன.
இதை குறிப்பிட்ட டெல்லி காவல்துறை அதன் பொதுமக்களுக்கு மாற்றுச் சாலைகளுக்கான வழிகளில் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளது. இதன் மீது டெல்லி
காவல்துறையின் சார்பில் இரண்டு ட்விட்கள் செய்து மாற்றுப் பாதைகள் காட்டப்பட்டுள்ளன.
மத்திய அரசுடனான அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை ஜனவரி 4 ஆம் தேதி நடைபெற உள்ளன. இதில் போராடும் விவசாய சங்கங்களின் 41 தலைவர்கள் மீண்டும் கலந்து உள்ள இருக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
25 mins ago
இந்தியா
42 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago