உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அடுத்த ஆண்டில் தொடங்க நாம் தயாராகி வருகிறோம் என பிரதமர் மோடி கூறினார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டினார். குஜராத் மாநிலத்தின் ஆளுநர், முதல்வர், மத்திய சுகாதார அமைச்சர், இணை அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவமனைத் திட்டத்திற்காக 201 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.1195 கோடி மதிப்பில் அமைக்கப்படவிருக்கும் இந்த மருத்துவமனையின் பணிகள் 2022-ஆம் ஆண்டு மத்தியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 750 படுக்கைகளைக் கொண்ட இந்த நவீன மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் கட்டிடமும் அமைக்கப்படும். இங்கு 125 எம்பிபிஎஸ் இடங்களும், செவிலியர் படிப்புக்கான 60 இடங்களும் இருக்கும்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
» உருமாறிய கரோனா வைரஸ் தொற்று; இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு
» புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை; டெல்லியில் இரவு ஊரடங்கு உத்தரவு
2020-ம் ஆண்டு பல்வேறு விஷயங்களை நமக்கு நன்றாகக் கற்றுக் கொடுத்தது. இது சவால்கள் நிறைந்த ஆண்டாகும். இந்தியாவின் முன்னணி கரோனா போர்வீரர்களை நினைவில் கொள்வதற்கு ஆண்டின் கடைசி நாள் இதுவாகும்.
நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அடுத்த ஆண்டில் தொடங்க நாம் தயாராகி வருகிறோம். இந்தியாவில் தடுப்பூசிகள் தொடர்பாக தேவையான இறுதிகட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தடுப்பூசி நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் சென்றடைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம்நாட்டில், வதந்திகள் விரைவாக பரவுகின்றன. வெவ்வேறு நபர்கள் தங்கள் தனிப்பட்ட லாபங்களுக்காக அல்லது பொறுப்பற்ற நடத்தை காரணமாக பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர். தடுப்பூசி போடத்தொடங்கும் போது வதந்திகள் பரவக்கூடும். எனவே மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago