புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை; டெல்லியில் இரவு ஊரடங்கு உத்தரவு

By பிடிஐ

டெல்லியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் காரணமாக அதிக அளவில் கூட்டம் சேர்வதைத் தவிர்க்க இன்று இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவின்படி, கோவிட் 19 காரணமாக நகரில் பொதுமக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்ப்பதற்காக இன்று இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி தலைமைச் செயலாளர் விஜய் தேவ் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவிஐடி -19 மற்றும் வேகமாக பரவக்கூடிய உருமாறிய இங்கிலாந்து கரோனா வைரஸ் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பெரிய அளவில் மக்கள் கூட்டங்களைத் தவிர்க்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி டெல்லி நகரில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 1 ஆம் தேதி இரவு 11 மணி முதல் ஜனவரி 2 ஆம் தேதி காலை 6 மணி வரையும் நீட்டிக்கப்பட்டு இந்த இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

கோவிட் 19 ஐக் கருத்தில் கொண்டு பெரிய கூட்டங்களைத் தவிர்ப்பதற்காக இரவு ஊரடங்கு உத்தரவின் போது டெல்லியில் பொது இடங்களில் கூடுவதற்கு 5 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டாது.

டெல்லியில் இரவு ஊரடங்கு உத்தரவின் போது வெளியூர் பயணிகள் மற்றும் சரக்கு வண்டிகள் மாநிலங்களுக்குள்ளிடையே செல்வதற்கு எந்த தடையும் இருக்காது.

இவ்வாறு டெல்லி அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்