இந்திய தொலைக்காட்சி நேயர்கள் பாலுறவு, நிர்வாணம் தொடர்பான காட்சிகளை விட, மதம் - சாதி சார்ந்த அவமானங்களைச் சித்தரிக்கும் காட்சிகளைப் பொறுத்துக்கொள்ள விரும்பவில்லை என்பதை புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளில் ஏதாவது நெருடலாக இருந்தால் 'தி பிராட்காஸ்டிங் கன்டன்ட் கம்ப்ளெயின்ட்ஸ் கவுன்சில்' (The Broadcasting Content Complaints Council) என்ற அமைப்பில் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
அந்த வகையில் அண்மைக்காலமாக, பொழுதுபோக்கு சேனல்களில் ஒளிபரப்பப்படும் காட்சிகள் தொடர்பான புகார்களில் பெரும்பாலானவை தீங்கு, குற்றம் ஆகிய பட்டியல்களில் அடங்குபவையாகவே இருக்கிறது எனக் கூறுகிறது 'தி பிராட்காஸ்டிங் கன்டன்ட் கம்ப்ளெயின்ட்ஸ் கவுன்சில்' (The Broadcasting Content Complaints Council) அமைப்பு.
இந்தப் பட்டியலின் கீழ் மட்டுமே 39% புகார்கள் பதிவாகியிருக்கின்றன. உடல் சவால் உள்ளவர்களை சித்தரித்த விதம், விலங்குகளுக்கு எதிரான வன்முறை, பெண்களை ஒரேமாதிரியாக வகைப்படுத்தும் விதம் தொடர்பாகவே இந்த 39% புகார்களும் பதிவாகியுள்ளனவாம். இதற்கு அடுத்தபடியாக மதம், இனம் சார்ந்த புகார்கள் 28% பதிவாகியுள்ளன.
முன்பெல்லாம் பாலுறவு, ஆபாசம், நிர்வாணம் தொடர்பான புகார்களே முதலிடத்தைப் பிடித்த நிலையில் கடந்த ஜூலை 3, 2014 முதல் ஆகஸ்ட் 22, 2015 இடையேயான காலகட்டத்தில் கிடைக்கப்பெற்ற 4,545 புகார்களின் அடிப்படையில் தீங்கு, குற்றம் ஆகிய பட்டியல்களில் அடங்கும் புகார்களே அதிகம் எனத் தெரியவந்துள்ளது.
2012-ம் ஆண்டுக்குப் பிறகே பாலுறவு, ஆபாசம் தொடர்பான காட்சிகள் மீதான பார்வை மாறியிருக்கிறது. இது தொடர்பாக வரும் புகார்களின் எண்ணிக்கை வெறும் 8% ஆக மட்டுமே இருக்கிறது. அதுவும், பெரும்பாலனவை மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் வாயிலாக வருபவையாகவே உள்ளன.
'தி பிராட்காஸ்டிங் கன்டன்ட் கம்ப்ளெயின்ட்ஸ் கவுன்சில்' (The Broadcasting Content Complaints Council) அமைப்பில் முன்வைக்கப்படும் புகார்கள் 7 பட்டியல்களின் கீழ் நீள்கின்றன. அவை குற்றம் மற்றும் வன்முறை, பாலுறவு, ஆபாசம் மற்றும் நிர்வாணம், திகில், போதை வஸ்துகள், புகை, மது பானங்கள், மதம் மற்றும் இனம், தீங்கு மற்றும் குற்றம், பொதுவான தடைக்குரியவை என்பவையே அவை.
புகார்கள் எப்படி கையாளப்படுகின்றன?
தி பிராட்காஸ்டிங் கன்டன்ட் கம்ப்ளெயின்ட்ஸ் கவுன்சிலுக்கு வரும் புகார்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பது குறித்து அதன் தலைவரும் பஞ்சாப்-ஹரியாணா மாநில உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான முகுல் முட்கல் கூறும்போது, "தினமும் 2 அல்லது 3 புகார்கள் பரிசீலிக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை ஒளிபரப்பியவருக்கு கேள்வி எழுப்பப்படுகிறது.
அதிக பட்சமாக ரூ.30 லட்சம் அபராதமும், 5 முறை மன்னிப்பு கேட்பதும் தண்டனையாக விதிக்கப்படுகிறது. இருப்பினும் இதுவரை விதிக்கப்பட்டதிலேயே அதிகபட்ச அபராதம் ரூ.7.5 லட்சம் என்பதேயாகும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago