பாஜகவின் அடிமட்டத் தொண்டர்கள் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறவேண்டுமென்றே விரும்புகிறார்கள். இல்லையெனில் மக்களை எதிர்கொள்வது சிரமம் என அவர்கள் நினைக்கிறார்கள் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 6-வது சுற்றுப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
''ஒருசில பணக்கார நண்பர்களின் நலனுக்காக நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளையும் பாஜக அரசு ஏமாற்றக் கூடாது. இன்றைய பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்.
» ராமர் கோயிலின் அடியில் சரயு நதி: உறுதியான அடித்தளத்துக்கு ஐஐடிக்களிடம் ஆலோசனை கேட்ட அறக்கட்டளை
» ஜனவரி 31-ம் தேதி வரை சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்து தடை நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு
உண்மை என்னவென்றால், பாஜகவின் அடிமட்டத் தொண்டர்களும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறவே விரும்புகின்றனர். வாபஸ் பெறவில்லையென்றால் மக்களை எதிர்கொள்வது சிரமம் என அவர்கள் நினைக்கிறார்கள். இந்தியாவின் அரசியல் தலைமை மக்களுக்காகப் பயன்படாத வகையில், இப்படி தரிசாக ஒருபோதும் இருந்ததில்லை.''
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
24 mins ago
இந்தியா
30 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago