பாஜக ஆளும் மாநிலங்கள் லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டங்களை இயற்றி அரசியலமைப்புச் சட்டத்தையே கேலிக்கூத்தாக்குகின்றன என்று அனைத்து இந்திய மஜ்லிஸ் இ இதிஹாத் உல் முஸ்லிமின்(ஐஏஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி சாடியுள்ளார்.
திருமணத்துக்காக மதம் மாறுதல், கட்டாய மதமாற்றம், லவ் ஜிகாத் ஆகியவற்றுக்கு எதிராக உத்தரப்பிரதேச அரசு முதலில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியது.
அதைத் தொடர்ந்து தற்போது மத்தியப்பிரதேச மாநிலமும் திருமணத்துக்காக மதம் மாறுவதைத் தடுக்க அவசரச் சட்டம் கொண்டுவர உள்ளது. இந்த அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ள ஆளுநரின் ஒப்பதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
இந்நிைலயில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி பாஜக ஆளும் மாநில அரசுகளை கடுமையாகச் சாடியுள்ளார். ஹைதரபாத்தில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
» பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு ஜனவரி 7-ம் தேதி வரை விமானங்கள் ரத்து
» வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது; இதுதான் மோடி அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அரசியலமைப்புச் சட்டத்தில் லவ் ஜிஹாத் எனும் வார்த்தைக்கு எந்த இடத்திலும் விளக்கம் இல்லை. ஆனால், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டங்களை இயற்றி அரசியலமைப்புச் சட்டத்தையே கேலிக்கூத்தாக்குகின்றன.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் சட்டங்களை உருவாக்க வேண்டும் என்று விரும்பினால், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாகவும், வேலைவாய்ப்பை உருவாக்குவது தொடர்பாகவும் சட்டத்தை உருவாக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் பிரிவு 21, 14 மற்றும் 25ன்கீழ், எந்தவொரு இந்திய குடிமகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த அரசாங்கத்திற்கும் எந்த பங்கும் இல்லை என்று நீதிமன்றங்கள் வலியுறுத்தியுள்ளன. அரசியலமைப்புச்சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதில் பாஜக தெளிவாக ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு ஒவைசி தெரிவித்தார்.
கட்டாய மதமாற்றம், திருமணத்துக்காக மதம் மாறுதல் ஆகியவற்றைத் தடுக்கும் பொருட்டு அவசரச் சட்டம் கொண்டுவரும் மசோதாவுக்கு மத்தியப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளித்தவுடன் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும்.
இந்த மதச் சுதந்திர மசோதாவின்படி, ஒருவரைத் திருமணத்துக்காக கட்டாயமாக மதமாற்றம் செய்தால், அவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago