உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியத்தின் உறுப்பினராக ஹர்ஷ் வர்தன் நியமனம்

By செய்திப்பிரிவு

உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியத்தின் உறுப்பினராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியத்தின் உறுப்பினராக மியான்மரைச் சேர்ந்த மின்ட்ஹிட்வே உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் 31ஆம் தேதியுடன் முடிகிறது. இந்த நிலையில் இந்தப் பதவிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியத்தில், தென்கிழக்கு மண்டல அலுவலகம், மேற்கத்திய பசிபிக் மண்டல அலுவலகத் தொகுதியின் பிரதிநிதியாக 2021 ஜனவரி 1ஆம் தேதி முதல், 2023 டிசம்பர் 31ஆம் தேதி வரை ஹர்ஷ் வர்தன் செயல்படுவார்.

இந்த வாரியம் ஆண்டுக்கு இரு முறை கூடி தடுப்பூசித் திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்கும். இந்த உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியம், தனது திட்டங்கள் மூலம் உலக நாடுகளைத் தொற்றுநோய் அச்சுறுத்தலில் இருந்து காக்கிறது, ஏழ்மையைக் குறைக்கிறது.

மனித உயிர்களைக் காக்கிறது. உலகின் ஏழை நாடுகளில் 822 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இந்த வாரியம் உதவியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்