டிஜிட்டல் கடன் செயலிகள் புற்றீசல் போல பெருகி வருகின்றன. `கடன் செயலிகள்' தரப்பில் 2 விதமான கடன்கள் வழங்கப்படுகின்றன. சம்பள முன்பண கடன், தனி நபர் கடன் என்ற பெயர்களில் ரூ.500 முதல் ரூ.50,000 வரை கடன்கள் வாரி வழங்கப்படுகின்றன.
கடன் பெறுவதற்கு கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து சம்பந்தப்பட்ட செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்
ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். புகைப்பட அடையாள அட்டை, ஆதார், புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். உடனடியாக சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். அப்போதே வட்டியும் எடுத்து கொள்ளப்படும்.
உதாரணமாக ஒருவர் ரூ.2,500 கடன் பெறுகிறார் என்றால், வட்டி போக ரூ.1,600 மட்டுமே அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பொதுவாக ஒரு வாரத்துக்குள் கடனை திருப்பிச் செலுத்த உத்தரவிடப்படும். கடன் பெற்றவரால் குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால் ஆன்லைன் கந்துவட்டி கும்பல், தனது கோர முகத்தை காட்ட தொடங்கிவிடும்.
செயலியை பதிவிறக்கம் செய்து, கடன் வழங்கும் நடைமுறையின் போதே செல்போனில் உள்ள அனைத்து எண்களும், புகைப்படங்
களும் கும்பலின் கைக்கு சென்றுவிடும். அந்த எண்களுக்கு கடன் பெற்றவர் குறித்து அவதூறு தகவல்கள் அனுப்பப்படும். கடன் பெற்றவர், அவரது குடும்ப உறுப்பினர்களின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படும். ஒரே நாளில் வெவ்வேறு எண்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வரும். ஆபாசமாக திட்டுவார்கள். நள்ளிரவில் தூங்கவிடமாட்டார்கள். போலி எப்ஐஆர் நகல்கள் அனுப்பப்படும். இந்த விபரீத வலைக்குள் சிக்கிக் கொள்பவர்கள், மிரட்டல், குடும்ப மானத்துக்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த சில வாரங்களில் தெலங்கானாவில் மட்டும் 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடன் செயலி மோசடி தொடர்பாக 75-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை தெலங்கானா போலீஸார் முடக்கியுள்ளனர். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 116 கடன் செயலிகளை நீக்க வேண்டும் என்று சைதராபாத் போலீஸாரும், 42 கடன் செயலிகளை நீக்கக் கோரி ஹைதராபாத் போலீஸாரும் கூகுள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கடன் செயலிகளுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆர்பிஐ, மத்திய நிதி அமைச்சகத்திலும் புகார் கடிதங்கள் குவிந்து வருகின்றன.சீனாவுடன் கும்பலுக்கு தொடர்புநிதித்துறை நிபுணர்கள் கூறியதாவது:
பெரும்பாலான கடன் செயலிகள் சீனாவை பூர்வீகமாகக் கொண்டுள்ளன. உள்ளூர் கும்பல்களின் உதவியுடன், சீன நிறுவனங்கள் ஆன்லைன் கந்து வட்டி கொடுமையை அரங்கேற்றி வருகின்றன. வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் ஆன்லைன் கந்து வட்டி கும்பல்கள் இயங்குகின்றன. 7 நாட்கள் முதல் 12 மாதங்களுக்குள் கடனை திருப்பி செலுத்தலாம் என்று ஆசை வார்த்தை கூறி மக்களை ஏமாற்றுகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரை சேர்ந்த சிஐடி போலீஸ் எஸ்.பி.சரத் கூறும்போது, "கடன் செயலி தொடர்பாக பெங்களூருவில் உள்ள 4 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் சோதனை நடத்தினோம். இந்த நிறுவனங்களுக்கும் சீனாவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது" என்று தெரிவித்தார்.
சீனாவுடன் கும்பலுக்கு தொடர்பு
நிதித்துறை நிபுணர்கள் கூறியதாவது: பெரும்பாலான கடன் செயலிகள் சீனாவை பூர்வீகமாகக் கொண்டுள்ளன. உள்ளூர் கும்பல்களின் உதவியுடன், சீன நிறுவனங்கள் ஆன்லைன் கந்து வட்டி கொடுமையை அரங்கேற்றி வருகின்றன. வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் ஆன்லைன் கந்து வட்டி கும்பல்கள் இயங்குகின்றன. 7 நாட்கள் முதல் 12 மாதங்களுக்குள் கடனை திருப்பி செலுத்தலாம் என்று ஆசை வார்த்தை கூறி மக்களை ஏமாற்றுகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரை சேர்ந்த சிஐடி போலீஸ் எஸ்.பி.சரத் கூறும்போது, "கடன் செயலி தொடர்பாக பெங்களூருவில் உள்ள 4 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் சோதனை நடத்தினோம். இந்த நிறுவனங்களுக்கும் சீனாவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago