ஒரே தேசம், ஒரே தேர்தல்: 25 இணையதளக் கருத்தரங்குகளை இம்மாதத்துக்குள் பாஜக நடத்துகிறது

By பிடிஐ


பிரதமர் மோடியின் முக்கிய நோக்கமாக இருக்கும் ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்துக்கு மக்களிடம் ஆதரவை உருவாக்கும் நோக்கில் 25 இணையதளக் கருத்தரங்குகளை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறுகையில் “ பிரதமர் மோடியின் முக்கிய கனவுதிட்டங்களில் ஒன்று ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டமாகும். இந்தத் திட்டத்துக்கு ஆதரவைத் திரட்டும் நோக்கில் 25 இணையதளக் கருத்தரங்குகளை பாஜக இந்த மாத இறுதிக்குள் நடத்த முடிவு செய்துள்ளோம். கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்பாளர்கள்” எனத் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் தேர்தல் அனைத்தும் அதாவது மக்களவைத் தேர்தல்முதல், சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் வரை அனைத்தும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

அடிக்கடி மாநிலங்களில் நடக்கும் தேர்தலால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கிறது, அதனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு நம்புகிறது.

சமீபத்தில் 80-வது அனைத்து இந்திய அதிகாரிகள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “ ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களில் சில மாதங்கள் நடக்கும் தேர்தல் பணிகளால் தேசத்தின் வளர்ச்சி பாதிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆதலால், ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்தை பரிசீலிக்க வேண்டும், அதற்கான ஆழ்ந்த ஆய்வுகள், அதுதொடர்பானமுடிவுகள், தீர்மானம் எடுப்பது அவசியம்” எனத் தெரிவித்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையிலான சட்ட ஆணையம் அளித்த பரிந்துரையில், “ மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்துவது, மக்கள் பணத்தை சேமிக்க உதவும்.

ஆனால், ஏற்கெனவே இருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடுமுழுவதும்ஒரே மாதிரியான தேர்தல், ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியமில்லை. ஆதலால், அரசியலமைப்புச்ச ட்டத்திலும், தேர்தல் சட்டத்திலும் மாற்றங்கள் செய்வது அவசியம் எனப் பரிந்துரைத்து என தனது அறிக்கையை மத்திய சட்ட அமைச்சகத்திடம் தாக்கல் செய்தது.

இந்த திட்டத்தை பற்றி சில ஆண்டுகளாக எதுவும் பேசாமல் அமைதி காத்த மத்திய அரசு இப்போது கையில் எடுத்துள்ளது. நிதிஆயோக் சமீபத்தில் அளித்த ஆலோசனையில், 2024-ம் ஆண்டிலிருந்து மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலை இரு கட்டங்களாக ஒன்றாக இணைத்து நடத்தலாம், நிர்வாகத்துக்கு சிக்கல் ஏற்படாமல், குறைந்த அளவிலான பிரச்சாரத்தை மட்டும் முன்னெடுக்கலாம்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்