வெளிநாடுகளில் இருந்து மும்பை வந்திறங்கிய 970 பயணிகள்: 489 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை

By பிடிஐ

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை வந்திறங்கிய 970 பயணிகளில் இதுவரை 489 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இங்கிலாந்தில் உருமாறிய கரோனா வைரஸைக் கண்டறிந்ததிலிருந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து வரும் அனைவருக்கும் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கரோனா வைரஸ் காரணமாக சில நிதினங்களுக்கு முன்பு இங்கிலாந்திலிருந்து வந்த பயணிகளை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசின் வழிகாட்டுதலில் மகாராஷ்டிரா அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மேலும் பல்வேறு நாடுகளிலிருந்தும் வரும் பயணிகளும் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மும்பை மாநகராட்சி ஆணையர் கூறியதாவது:

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று பகலில் 8 விமானங்கள் வந்தன. எட்டு விமானங்களில் மூன்று ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்தவை. அவற்றிலிருந்து மொத்தம் 120 பயணிகள் வந்தனர். அவர்களில் 32 பேர் மும்பையில் நிறுவன தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர்.

இரண்டு பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், இருவர் கர்ப்பிணிப் பெண்கள், மேலும் இருவர் மருத்துவ அவசரநிலை காரணமாக விலக்கு பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று மட்டும் பல்வேறு நாடுகளிலிருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய 970 பயணிகளில் 489 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் இருந்து விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 745 பேர் மும்பை ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்