இந்தியாவில் கரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 97 லட்சத்தைக் கடந்தது.
இந்தியாவில் கரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 97 லட்சத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,272 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,01,69,118 ஆக அதிகரித்துள்ளது.
» கரோனா தடுப்பூசி பற்றிய தவறான தகவல்களால் மக்களிடம் பீதி: வெங்கய்ய நாயுடு வேதனை
» மத்திய அரசு ஊழியர்கள் பணி விவரங்களை ஒரே தளத்தில் அறிந்து கொள்ள ஏற்பாடு
கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 97,40,108 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 22,274 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 95 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,81,667 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2.78 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கரோனா வைரஸால் நேற்று மட்டும் 251 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,47,343 ஆக அதிகரித்துள்ளது.கரோனாவில் உயிரிழப்பு 1.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.
செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20-ம் தேதி 90 லட்சத்தையும் , டிசம்பர் 19-ம் தேதி ஒரு கோடியையும் கடந்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago