பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வரை பல முறை தொடர்பு கொண்டேன். ஆனால் எனது கடிதங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை என மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.
9 கோடி விவசாய குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ .18,000 கோடியை வழங்கிப் பேசிய பிரதமர் மோடி, ''மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 23 லட்சம் விவசாயிகள் இந்த நிதி வசதி பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார்கள். ஆனால் அந்த மாநில அரசு பரிசோதனை வழிமுறைகளுக்காக நிறுத்தி வைத்துவிட்டது, மம்தா பானர்ஜி அரசின் செயல்பாடுகளால் மேற்கு வங்க விவசாயிகள் நிதிச்சலுகைகளை இழந்துவருகிறார்கள்' என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும்விதமாக திரிணமூல் காங்கிரஸ் அரசியல் பலன்களை அறுவடை செய்வதற்காக பிரதமர் மோடி இப்படி பேசுவதாக குற்றச்சாட்டு தெரிவித்தது.
இதுகுறித்து மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் கூறியதாவது:
பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் மேற்குவங்க விவசாயிகள் பயன் பெறாதது கவலையளிக்கிறது. ஒரு ஆளுநராக நான் மேற்கு வங்க முதல்வரை பல முறை தொடர்பு கொண்டேன். ஆனால் எனது கடிதங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago