இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட விழா: அறிவியல் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன

By செய்திப்பிரிவு

இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட விழாவில் பல பிரிவு அறிவியல் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-இல் இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட விழா (ஐஎஸ்எப்எப்ஐ) முக்கிய ஈர்ப்பு நிகழ்ச்சியாக உள்ளது. இந்தாண்டு ஐஎஸ்எப்எப்ஐ நிகழ்ச்சிக்கு, 60 நாடுகளைச் சேர்ந்த 634 அறிவியல் திரைப்படங்கள் வந்தன.

அறிவியல் ஆர்வலர்களையும், இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் அறிவியல் திரைப்பட தயாரிப்பிற்கு ஈர்க்கவும், அறிவியலைப் பிரபலப்படுத்துவதில் பங்களிப்பை அளிக்கவும் இது ஒரு முக்கியமான தளமாகும்.

ஐஎஸ்எப்எப்ஐ நிகழ்ச்சியை மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்துப் பேசுகையில், “அறிவியல், தொழில்நுட்பம், கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தற்சார்பாக இருப்பதற்கான இந்தியாவின் முயற்சிகள் போன்ற கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இந்தத் திரைப்படங்கள் ஏராளமான பிரிவுகளைக் கொண்டுள்ளன. அறிவியல் தகவல்களைத் தெரிவிக்க, அறிவியல் திரைப்படம் நல்ல வழிமுறை’’ எனக் கூறினார்.

ஐஎஸ்எப்எப்ஐ நடுவரும், சினிமா தயாரிப்பாளரான திரு மைக் பாண்டே ‘‘ஒவ்வொரு ஆண்டும், திரைப்பட விழா எண்ணிக்கையிலும், அளவிலும் வளர்ந்து வருகிறது. வரவிருக்கும் அறிவியல் திரைப்படத் தயாரிப்பாளர்களை வழிநடத்த, இந்நிகழ்ச்சி முக்கியமான தளமாக உள்ளது. மிகப் பெரிய ஆற்றல் இங்கு உள்ளது. அவற்றை வளர்க்க, நாம் நமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும்’’ என்றார்.

இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத் திரைப்பட அமைப்பின் தலைவர் டாக்டர். உய் ஹோஆங் கூறுகையில், ‘‘மக்களை ஒன்றிணைக்கும் சவாலை எதிர்கொள்ள, அறிவியல் தகவல்தொடர்பு தயாராக உள்ளது மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தொடங்கியுள்ளனர், இது நிச்சயம் தீர்க்கப்படும்’’ என்றார்.

விஞ்ஞான் பிரசார் இயக்குநர் டாக்டர். நகுல் பரசர் பேசுகையில், “திரைப்படத் திருவிழாக்களை நடத்திய நல்ல அனுபவம் நமக்கு உள்ளது. இந்த திரைப்பட விழாவுக்காக, 10வது தேசிய அறிவியல் திரைப்பட விழாவை நாம் நடத்தினோம். அதே போன்ற உற்சாகத்தில் நாம் இருக்கிறோம்’’ என்றார்.

ஐஎஸ்எப்எப்ஐ ஒருங்கிணைப்பாளர் நிமிஷ் கபூர் கூறுகையில், “அறிவியலைப் பிரபலப்படுத்துவதற்கு, திரைப்படங்களின் திறனைப் பயன்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட விழாவில், 200க்கும் மேற்பட்ட படங்களை ஆன்லைன் மூலமாக நாங்கள் திரையிடவுள்ளோம். விருதுகளை வென்ற படங்கள் டிசம்பர் 25-ம் தேதி அறிவிக்கப்படும்’’ என்றார்.

இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட விழா, மக்களிடையே அறிவியலைப் பிரபலப்படுத்துவதை ஊக்குவிக்கிறது. திறமையான இளம் அறிவியல் திரைப்படத் தயாரிப்பாளர்களையும், அறிவியல் ஆர்வலர்களையும் ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்வு மாணவர்களுக்கும், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் திரைப்படங்கள் மூலம் அறிவியல் தொடர்புச் செயல்பாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்