பாஜகவில் இணைந்த  6 எம்எல்ஏக்கள்: அருணாச்சலில் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு கடும் பின்னடைவு

By பிடிஐ

பாஜகவில் 6 எம்எல்ஏக்கள் இணைந்ததை அடுத்து அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஐக்கிய ஜனதா தளக் கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இவர்களுடன் அருணாச்சல மக்கள் கட்சியின் லிகாபாலி தொகுதி எம்எல்ஏ ஒருவரும் பாஜகவில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து, நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே மாநிலத்தில் இந்த மாற்றங்கள் நடந்துள்ளன.

இதுகுறித்து அருணாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ரும்காங் சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த தாலேம் தபோ, ஹயெங் மங்ஃபி (சயாங் தாஜோ தொகுதி), ஜிகே டகோ (தாலி), டோர்ஜி வாங்டி கர்மா (கலக்தாங்), டோங்ரு சியோங்ஜு (போம்டிலா), காங்காங் டாகு (மரியாங் கேகு)ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் மொத்தம் 7 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் தற்போது 6 பேர் பாஜகவுக்கு சென்றுள்ளனர். கடந்த நவம்பர் 26 அன்று, ஜே.டி.யு சியோங்ஜு, கர்மா மற்றும் டாகுவுக்கு "கட்சி எதிர்ப்பு" நடவடிக்கைகளுக்காக காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதோடு அவர்களை இடைநீக்கம் செய்தது.

முன்னதாக பாஜகவில் இணைந்துள்ள ஆறு ஜே.டி.யு எம்.எல்.ஏக்களும் தலேம் தபோவை புதிய சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தனர்.

அருணாச்சல மக்கள் கட்சியின் எம்.எல்.ஏவும் இந்த மாத தொடக்கத்தில் கட்சியின் பிராந்திய அமைப்பால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து பாஜகவின் அருணாச்சல பிரதேச தலைவர் பி ஆர் வாகே கூறுகையில்,"கட்சியில் சேர விருப்பத்தை தெரிவிக்கும் எம்எல்ஏக்களின் கடிதங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்" என்று தெரிவித்தார்.

கடந்த வாரம் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 1 எம்.பி உள்பட 11 எம்எல்ஏக்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்