9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியுதவி: 3-வது கட்ட தவணையை பிரதமர் மோடி வழங்கினார் 

By பிடிஐ


நாட்டில் உள்ள 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 3-வது கட்ட தவணையாக ரூ.18 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி இன்று வழங்கினார்.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி, ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி நடப்பு நிதியாண்டுக்கான 3-வது தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான நிதி ரூ.18 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி இன்று விடுவித்தார்.

விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை நேரடியாக அரசின் சார்பில் டெபாசிட் செய்யப்படும். அதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடி இன்று 6 மாநில விவசாயிகளுடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதற்காக நாடுமுழுவதும் 19 ஆயிரம்இடங்களில் பிரதமர் மோடியின் பேச்சை விவசாயிகள் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளான இன்று சிறந்த நிர்வாகத்துக்கான நாளாக மத்திய அரச கடைபிடித்து வருகிறது. இன்றைய தினத்தில் விவசாயிகளுக்கு மூன்றாவது கட்ட நிதியுதவியை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும்நிலையில், இந்த நிதியுதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் கோரி வரும் நிலையில், இந்த சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காக இயற்றப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இதனால் இருதரப்புக்கும்இடையிலான சிக்கல் முடிவு பெறாமல், 6-வது கட்ட பேச்சுவார்த்தையை நோக்கி நகர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்