விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த நிறுவனமாக விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியம் (AFSCB) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்திய வர்த்தகத் தொழில் கூட்டமைப்பு (எப்ஐசிசிஐ) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த நிறுவனம் (பொதுத்துறை) 2020” என்ற பிரிவில் விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தை (AFSCB) வெற்றியாளராகக் குறிப்பிட்டுள்ளது.
எப்ஐசிசிஐ இந்தியா விளையாட்டு விருதுகள் விழாவில், விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த நிறுவனம் என்ற விருது விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடந்த 8ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி முத்கல் தலைமை தாங்கினார்.
காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்த விழாவில், இந்த விருதை விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏர் கமடோர் அசுதோஷ் சதுர்வேதி, எப்ஐசிசிஐ தலைவரிடம் இருந்து பெற்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
55 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago