கோவிட்-19 நெருக்கடி நேரத்தில், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டது குறித்து விரிவான அறிக்கையை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில், கோவிட்-19 தொற்று, உலகளாவிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயால், இந்தியா மட்டும் அல்லாமல், ஒட்டு மொத்த உலகமும் பாதிக்கப்பட்டது. இந்தியாவும் கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடி வருகிறது. குணமடையும் வீதத்தை அதிகரிக்க, ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் நாம் பார்த்தோம். பாரம்பரிய மற்றும் நவீன முறைகளை பல நடவடிக்கைகள் மூலம் ஆயுஷ் அமைச்சகம் ஒருங்கிணைத்தது.
கோவிட் 19-க்கு எதிரான ஆயுஷ் அமைச்சகத்தின் நடவடிக்கைகள்: எதிர்ப்பு சக்திக்கு, சுய நல வழிகாட்டுதல்கள் மற்றும் தடுப்பு சுகாதார நடவடிக்கைகளை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டது. ‘‘எதிர்ப்பு சக்திக்கான ஆயுஷ்’’ என்ற மூன்று மாதப் பிரசாரத்தை ஆயுஷ் அமைச்சகம் தொடங்கியது. தொலைதூர மருத்துவ முறைகளுக்கான வழிகாட்டுதல்களையும் ஆயுஷ் அமைச்சகம் உருவாக்கியது.
ஆயுஷ் துறையில் கோவிட்-19 ஆராய்ச்சிப் படிப்புகள்: நாட்டில் 135 மையங்களில், 104 ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள், மற்றும் ஆயுஷ் ஆலோசனைகளின் பயன்பாடு குறித்த மதிப்பீட்டையும் ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்டது. ஆயுஷ் சஞ்சீவனி செயலியை 1.47 கோடி பேர் பயன்படுத்தினர். இவர்களில் 85.1 சதவீதம் பேர், கோவிட் -19 சிகிச்சைக்கு ஆயுஷ் தீர்வுகளைப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளனர்.
புதிய சட்டங்கள் அமலாக்கம் - இந்திய மருத்துவ மத்தியக் கவுன்சில் சட்டத்துக்கு(1970) மாற்றாக, இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணைய சட்டம் (என்சிஐஎம்), 2020 மற்றும் ஹோமியோபதிக்கான தேசிய ஆணைய சட்டம் (என்சிஎச்) ஆகியவை 2020 செப்டம்பர் 21ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஆயுஷ் கல்வியில் சீர்திருத்தங்களை கொண்டு வருவது தான் இந்த சட்டங்களின் நோக்கம்.
தேசிய முக்கியத்துவம் மையம் நிறுவல் (ஐஎன்ஐ): ஆயுர்வேதக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையச் சட்டம், 2020, கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஜாம் நகரில் உள்ள குஜராத் ஆயுர்வேதப் பல்கலைக்கழகத்தில் உள்ள 4 மையங்களை இணைத்து, ஆயுர்வேதக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டு அதற்கு தேசிய முக்கியத்துவ மையத்திற்குரிய அந்தஸ்து வழங்கப்பட்டது.
ஜெய்ப்பூர் ஆயுர்வேத மையத்துக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து: ஜெய்ப்பூரில் உள்ள ஆயுர்வேத தேசிய மையத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது. இதை கடந்த நவம்பர் 13ஆம் தேதி, காணொலிக் காட்சி மூலம், பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்தியாவில் பாரம்பரிய மருந்துக்கான உலகளாவிய மையம் அமைத்தல் : 5வது ஆயுர்வேத தினம் கடந்த நவம்பர் 13ஆம் தேதி கொண்டாடிய போது, வீடியோ மூலம் உரை நிகழ்த்திய உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர். டெட்ரஸ் அதானம் கெப்ரேசியஸ், இந்தியாவில் பாரம்பரிய மருந்துக்கான உலகளாவிய மையம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதற்காக அவருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago