9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ. 2000: பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்

By செய்திப்பிரிவு

பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் நாளை 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூபாய் 2000 பிரதமர் வழங்க உள்ளார்.

டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை அன்று பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூபாய் 2000 பிரதமர் நரேந்திர மோடி வழங்க உள்ளார். இத்திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக தலா ரூபாய் இரண்டாயிரம் என மொத்தம் ரூ.18ஆயிரம் கோடி செலுத்தப்படும்.

முன்னாள் பிரதமர் ஏ. பி. வாஜ்பாயின் பிறந்த நாளான அன்று விவசாயிகளுடன் காணொலி மூலம் பிரதமர் உரையாட உள்ளார். இந்த வருடத்தின் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இத்திட்டத்தின் முதல் இரண்டு தவணைகள் வழங்கப்பட்டன. பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதித்திட்டத்தின் மூன்றாவது மற்றும் கடைசித் தவணை இதுவாகும்.

பிரதமர் நரேந்திர மோடியால் 2019-ஆம் ஆண்டு பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதி (பி எம் - கிசான்) தொடங்கப்பட்டது. ஒரு சில விலக்குகளைத் தவிர, நாட்டிலுள்ள விளைநிலம் வைத்துள்ள அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் நிதி ஆதரவை வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று தவணைகளில் தலா ரூ.2000 என வருடத்துக்கு ரூ.6000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

இத்திட்டம் தொடங்கப்பட்ட புதிதில் (பிப்ரவரி 2019), 2 ஹெக்டேர் அளவுக்கு நிலம் வைத்துள்ள சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளின் குடும்பங்களுக்கு மட்டுமே பலன்கள் அனுமதிக்கப்பட்டன. பின்னர் ஜூன் 2019-இல் இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, நிலத்துக்கான உச்சவரம்பு எதுவும் இல்லாமல் அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் இதன் பலன்கள் நீட்டிக்கப்பட்டன. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

இந்த வருடம் ஆகஸ்டு 9 அன்று, 8.5 கோடி விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளுக்கு பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் ரூ.17,000 கோடி செலுத்தப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

முதல் தவணையாக ரூ.2000 ஏப்ரல் மாதத்திலேயே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மூன்று தவணைகளில் தலா ரூ.2000 என வருடத்துக்கு ரூ.6000 விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இயற்கையைப் பெரிதும் நம்பி விவசாயம் உள்ளதால் தங்களது செலவுகளை எதிர்கொள்வதற்குப் போராடும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இத்திட்டம் அமைந்துள்ளது. பொதுமுடக்கத்தின் போது கூட விவசாயிகளின் துயரங்களைக் களைவதற்கு பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்