நடுத்தர ரக ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா

By செய்திப்பிரிவு

தரையிலிருந்து வானுக்கு பாயும் நடுத்தர ரக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.

ஒடிசா கடற்கரைக்கு அருகே உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து நேற்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்த சாதனையை செய்தது.

விமானம் போன்ற ஆளில்லாத அதிவேக வான் இலக்கு ஒன்றை நேரடியாக வெற்றிகரமாக இந்த ஏவுகணை தாக்கி அழித்ததன் மூலம் முக்கிய மைல்கல்லை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எட்டியது.

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக தரையிலிருந்து வானுக்கு பாயும் நடுத்தர ரக ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்தியா, மற்றும் ஐ ஏ ஐ, இஸ்ரேல் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.

வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ள இந்த சோதனைக்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களை தெரிவித்தார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டியும் பாராட்டியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்