கோவிட் 19 தடுப்பூசிக்காக காத்திருக்கும் டெல்லி அரசு மருத்துவமனை: தயார் நிலையில் முன்னேற்பாடுகள்

By பிடிஐ

கோவிட் 19 தடுப்பூசிக்காக டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிடி அரசு மருத்துவமனை மிகுந்த முன்னேற்பாடுகளுடன் தயாராகி வருகிறது.

கோவிட் தடுப்பூசி வந்தவுடன், அடுத்த செயல்முறை விரைவில் தொடங்கப்படும் வகையில், சேமிப்பு மற்றும் போக்குவரத்து தளவாடங்களை உருவாக்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யெந்தர் ஜெயின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து டெல்லி அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:

ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 650 படுக்கைகளுடன் கூடிய பிரத்யேக கோவிட் -19 வசதி உள்ளது.

COVID-19 தடுப்பூசியை சேமிக்கும் எதிர்பார்ப்பில் குளிர்ப்பதன வசதிகள் நிறுவப்படுவது, குளிர்ப்பதன சங்கிலி உபகரணங்கள் அமைக்கப்படுவது வரை, ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனையில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இம்மருத்துவமனையில் மொத்தம் 90 குளிர்ப்பதன சாதனங்கள் வர உள்ளன, அவற்றில் பல ஏற்கெனவே கொண்டு வந்து நிறுவப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் குளிர்ப்பதன சாதனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

தவிர, தடுப்பூசிகளை பாதுகாத்து வைப்பதற்காக சேமிப்பதற்காக இரண்டு குளிர்ப்பதன சங்கிலி உபகரணங்கள் இருக்கும். சுமார் 4,700 சதுர அடி அளவிலான பயன்பாட்டு தொகுதிகள் (utility block) உருவாக்கப்பட்டுள்ள பகுதியில் தரை மற்றும் முதல் தளங்கள் தடுப்பூசிகளின் சேமிப்பு வசதிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

எந்த தடுப்பூசி வரும் என்பதோ அதன் தேதியோ தடுப்பூசி எப்போது வரும் என்பதோ எதுவுமே உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன, தடுப்பூசிகள் சேமிப்பு முதல் பாதுகாப்பு வரை முழு செயல்முறையையும் டெல்லி மாநில சுகாதார மிஷன் நிர்வகிக்கும்.

இவ்வாறு ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்