விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா, சாந்திநிகேதனில் டிசம்பர் 24ம் தேதி நடக்கிறது. அன்று காலை 11 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார்.
மேற்குவங்க ஆளுநர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் கடந்த 1921ம் ஆண்டு குருதேவ் ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்டது. இது நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகம். கடந்த 1951ம் ஆண்டு விஸ்வ பாரதி பல்கலைக்கழகம், நாடாளுமன்ற சட்டம் மூலம் மத்திய பல்கலைக்கழகமாகவும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகமாகவும் அறிவிக்கப்பட்டது.
இது நவீன பல்கலைக்கழகமாக உருவானாலும், இந்த பல்கலைக்கழகம் குருதேவ் தாகூர் வகுத்த கல்வி நெறிமுறைகளை பின்பற்றியது. பிரதமர் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago