மேற்கு உ.பி.யின் ஏட்டா மாவட்டம், ஜலேஷ்வர் பகுதியில் துணிக்கடை ஒன்றில் வேலை செய்யும் இளைஞருடன் 21 வயதுபெண்ணுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்து பெண்ணான அவர், அந்த இளைஞரை மணமுடிக்க வேண்டி, கடந்த நவம்பர் 17-ம் தேதி தலைமறைவானார். இந்த விவரம் அறியாத அப்பெண்ணின் குடும்பத்தினர் அவரை காணவில்லை என நவம்பர் 25-ல் ஜலேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனிடையே அந்த துணிக்கடை இளைஞர், டெல்லியில் இருந்து ஏட்டா மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், காணாமல்போன பெண்ணை அவர் மணம் முடிப்பதற்காக அப்பெண் முஸ்லிம் மதத்திற்கு மாற அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்த தகவல் அறிந்த பெண் வீட்டார், காதல் திருமணம் என்ற பெயரில் தங்கள் பெண்ணை கட்டாய மதமாற்றம் செய்வதாக புதிய சட்டத்தின் கீழ் புகார் அளித்தனர்.
இதையடுத்து ஜலேஷ்வரில் துணிக்கடை இளைஞரின் குடும்பத்தினர் 6 பேரை போலீஸார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அந்த இளைஞர் உள்ளிட்ட 5 பேர் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு தலா ரூ.25,000 வெகுமதி அறிவித்து 5 பேரையும் தேடி வருகின்றனர். இதுபோன்ற புகார்களும், கைதுகளும் உ.பி.யில் ‘லவ் ஜிகாத்’ கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் அமலானது முதல் அதிகரித்து வருகின்றன.
விடுதலையான இருவர்
கடந்த டிசம்பர் 3-ல் உ.பி.யின் முராதாபாத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 2 முஸ்லிம் சகோதரர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர். மதமாற்றம் செய்ததாக இவர்களுக்கு எதிரானஆதாரம் போலீஸாரிடம் இல்லைஎன்று கூறி முராதாபாத் நீதிமன்றம் இவர்களை விடுவித்தது. இதன்மூலம் இவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் தவறு எதுவும் செய்யாமல் 15 நாட்கள் சிறையில் கழித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இவர்களில் ஒருவரது 22 வயது மனைவியான 5 மாதக் கர்ப்பிணியும் அரசு மகளிர் காப்பகத்தில் இருந்து கணவரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விடுதியில் தங்கியிருந்தபோது, கட்டாயமாக ஊசி செலுத்தி தனது கர்ப்பத்தை கலைத்ததாக அப்பெண் புகார் கூறியுள்ளார்.
புதிய சட்டம் அமலாவதற்கு முன் கடந்த ஜுலையில் தாமாக விரும்பி முஸ்லிம் இளைஞரை மணம் முடித்ததாக அப்பெண் கூறியுள்ளார். இருவரும் டிசம்பர் 3-ல் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய வந்தபோது பஜ்ரங் தளம் அமைப்பினரால் பிடிக்கப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago