திருப்பதி ஏழுமலையான் கோயி லில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலையில் ஆழ்வார்திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
வைகுண்ட ஏகாதசி வரும் 25-ம்தேதி வருவதை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று காலையில் ஆழ்வார் திருமஞ்சன சேவை நடைபெற்றது. காலை முதலே கோயிலில் உள்ளகற்பகிரகம், பலிபீடம், கொடிமரம், விமான கோபுரம் மற்றும் அனைத்து உப சன்னதிகளையும் பன்னீர், சந்தனம், குங்கும், மஞ்சள், பச்சை கற்பூரம் போன்றவற்றால் சுத்தம் செய்தனர். சுமார் 5 மணி நேரம் வரை ஆழ்வார் திருமஞ்சன சேவை நடைபெற்றது. நண்பகல்12 மணிக்கு பிறகு பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதித்தனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 25-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை முதன்முறையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து 10நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 10 நாட்களுக்கு ஆன்லைன் மூலம் ரூ.300 சிறப்பு தரிசனடிக்கெட்கள் ஏற்கெனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. இதனிடையே, கரோனா பரவலை தடுக்கும் வகையில், சர்வ தரிசனத்துக்காக 25-ம்தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் வீதம் 1 லட்சம் டிக்கெட்கள் திருப்பதி பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
பக்தர்கள் தர்ணா
இதனால், வெளியூரில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ள நூற்றுக் கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் அலிபிரி கருடன் சிலைமுன்பு நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். திருப்பதியில் குவியும் பக்தர்களை சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago