டெல்லியில் விவசாயிகள் கடந்த 28 நாட்களாக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர். இதனால், டெல்லி, பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ரூ.14,000 கோடி இழப்பானதாக அகில இந்திய வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு சிஏடி) தெரிவித்துள்ளது.
இது குறித்து சிஏடியின் தேசிய தலைவரான பி.சி.பாட்டியா, தேசிய பொதுச்செயலாளரான பிரவீன் கண்டல்வால் ஆகியோர் இணைந்து கூறிருப்பதாவது:
விவசாயிகள் போராட்டத்தில் டெல்லிக்கு சுமார் 20 சதவிகிதம் வாகனங்கள் பொருட்களுடன் அண்டை மாநிலங்களிலிருந்து வரமுடியவில்லை. இதேபோல், டெல்லியிலிருந்தும் அண்டை மாநிலங்களுக்கு இவை செல்ல முடிவதில்லை.
டெல்லிக்கு அன்றாடம் சுமார் ஐம்பதாயிரம் வாகனங்கள் பொருட்களை ஏற்றிக்கொண்டு வருவது உண்டு. இதில், முப்பதாயிரம் வாகனங்கள் டெல்லியிலிருந்து நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு பொருட்களை கொண்டு செல்கின்றன.
எனினும், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு டெல்லியில் பிரச்சனை இல்லை. இப்பிரச்சனையில் தொடர்ந்து எங்கள் அமைப்பு தீவிர கண்காணிப்பை வைத்துள்ளது.
வழக்கமாக வாகனங்கள், டெல்லி-ஜெய்பூர், டெல்லி-மதுரா, ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே டெல்லி-காஜியாபாத் மற்றும் டெல்லி-சண்டிகர் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக வருகின்றன.
இவற்றில் பல அவ்வப்போது மறிக்கப்படுகிறது அல்லது போராட்டம் காரணமாக நெடிய போக்குவரத்து தடை உருவாகிறது. இதனால், டெல்லியின் பொருட்கள் விநியோகம் தடைபட்டு டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் சுமார் 14,000 கோடி இழப்பானது.
எனவே, மத்திய அமைச்சர்கள் இதில் அதிக தீவிரம் காட்டி போராட்டத்தை முடிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் மீதான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை அமர்விலும் விசாரித்தால் உதவியாக இருக்கும்.
இவ்வாறு தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago