மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 200 இடங்களுக்கும் அதிகமாக வெல்லாவிட்டால், அந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கட்சியிலிருந்து விலகுவார்களா என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் 2-வது முறையாக சவால் விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி இப்போதிருந்தே நிலவி வருகிறது.
கடந்த சில நாட்களாக திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் வலுத்து வருகிறது. இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.
இதில் கடந்த இரு நாட்களுக்கு முன் மேற்கு வங்கத்துக்கு வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அதிகாரி உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.
» விலங்குகள் பாதுகாப்பான இடங்களில் வாழ்வதையும் உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான நிறுவனம் வகுத்துக் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “குறிப்பிட்ட சில ஆதரவு ஊடகங்களின் அனைத்துவிதமான பிரச்சாரங்களால் பாஜக வலுவாகக் காண்பிக்கப்படுகிறது. உண்மையில், மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வெல்லவே தடுமாறப் போகிறது.
என்னுடைய ட்விட்டர் பதிவைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றுவிட்டால், நான் ட்விட்டரிலிருந்து விலகிவிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று 2-வது சவாலை பாஜகவுக்கு பிரசாந்த் கிஷோர் விடுத்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், “மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வெல்லத் தடுமாறப் போகிறது.
என்னுடைய கணிப்பின்படி 100 தொகுதிகளுக்கும் குறைவாகத்தான் பாஜகவுக்குக் கிடைக்கும். ஒருவேளை 200 இடங்களுக்கு குறைவாக பாஜக பெற்றால், அந்தக் கட்சியின் தலைவர்கள் கட்சியிருந்து விலகுவார்களா?'' என்று சவால் விடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
இந்தியா
32 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago