மோதிலால் வோரா மறைவு: பிரதமர் மோடி, சோனியா காந்தி இரங்கல்

By செய்திப்பிரிவு

மோதிலால் வோராவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்தவர் மோதிலால் வோரா. பத்திரிகையாளராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். மத்தியப் பிரதேச மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சர், உத்திரப்பிரதேச மாநில ஆளுநர், மாநிலங்களவை எம்.பி. என பல பொறுப்புகளை வகித்தார்.

இந்தநிலையில் மோதிலால் வோரா உடலநலக் குறைவு காரணமாக டெல்லி போர்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

93 வயதான அவருக்கு சிறுநீரகப் பாதை தொற்று மற்றும் நுரையீரல் பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

மோதிலால் வோராவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் "காங்கிரஸின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான மோதிலால் வோரா மிக நீண்ட அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான அனுபவம் கொண்டவர். அவரது மறைவால் துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கும் நலன் விரும்பிகளுக்கும் அனுதாபங்கள் ஓம் சாந்தி," என்றுக் கூறியுள்ளார்.

இதுபோலவே வோரா மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்