சுகாதார சேவைகளில் இருக்கும் குறைகளை போக்குவதே அரசின் முன்னுரிமை: ஹர்ஷ் வர்தன்

By செய்திப்பிரிவு

பிராந்திய அளவில் சுகாதார சேவைகளில் இருக்கும் குறைகளை போக்குவதும், மருத்துவ கல்விக்கான வசதிகளை விரிவாக்குவதும் அரசின் முன்னுரிமை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று கூறினார்.

குஜராத் ராஜ்கோட்டில் அமைக்கப்பட்டுள்ள எய்ம்சின் முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களின் வகுப்புகளை காணொலி மூலம் துவக்கி வைத்துப் பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான நாட்டின் போரில், மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் முன்களத்தில் நின்றதாக பெருமிதத்துடன் கூறினார்.

"மருத்துவம் என்பது நூதனமான, அதேசமயம் நிர்ப்பந்தம் அதிகம் உள்ள ஒரு தொழிலாகும். மருத்துவத் தொழிலை தேர்ந்தெடுத்துள்ள திறமை வாய்ந்த இளைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள். பிராந்திய அளவில் சுகாதார சேவைகளில் இருக்கும் குறைகளை போக்குவதும், மருத்துவ கல்விக்கான வசதிகளை விரிவாக்குவதும் அரசின் முன்னுரிமை " என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மேலும் பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர், குஜராத் ராஜ்கோட்டில் அமைக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குள்ள தலைமையின் கீழ் அமைக்கப்பட்டுவரும் பல்வேறு புதிய எய்ம்ஸ்களில் ஒன்றாகும் என்றார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான நிதின் பாய் படேல் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்