161 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் கரோனா பாதிப்பு 3.03 லட்சமாகக் குறைவு

By செய்திப்பிரிவு

161 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் கரோனா பாதிப்பு 3,03,639 குறைந்துள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 3.02 சதவீதமாகும். கடந்த ஜூலை 13-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 3,01,609 ஆக இருந்தது.

கடந்த 24 நாட்களாக புதிய பாதிப்பை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 24,337 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 25,709 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96,06,111 ஆக (95.53%) பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்களில் 71.61 சதவீதத்தினர், 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். குணமடைந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து, தற்போது 93,02,472 ஆக உள்ளது.

நாட்டின் மொத்த பாதிப்பில் 79.20 சதவீதம், 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 333 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 81.38 சதவீதத்தினர், 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

மேலும்