லாலு பிரசாத் யாதவின் சிறுநீரகம் 75 சதவீதம் பாதிப்பு: ராஞ்சி அரசு மருத்துவமனை குழு தகவல்

By ஆர்.ஷபிமுன்னா

கால்நடை தீவன வழக்கில் தண்டனை பெற்ற பிஹார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்டின் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் அவரது சிறுநீரகம் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்து வக்குழு தெரிவித்துள்ளது.

உடல்நலக்குறைவால் ராஞ்சியின் ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் லாலு பிரசாத் யாதவின் சிறுநீரகம் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 25 சதவிகிதம் மட்டுமே செயல்படுவதால் லாலுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக ரிம்ஸ் மருத்துவக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால், லாலுவை காண அவரது மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவ் விரைந்துள்ளார்.

இதுகுறித்து தேஜஸ்வி கூறும்போது, "எனது தந்தையின்உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதால் அவரை 5 மாதங் களுக்குப் பிறகு பார்க்க வந்துள்ளோம். இங்கு மருத்துவர் கள் அளித்த அறிக்கையை, டெல்லியில் உள்ள சிறுநீரக நிபுணர்கள் மற்றும் எங்கள் குடும்ப மருத்துவர்களுக்கும் அனுப்பி தீவிர சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

சமீபத்தில் முடிந்த பிஹார் தேர்தலுக்குப் பிறகு முதன் முறையாக தேஜஸ்வி தனது தந்தையை காணச் சென்றுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவைத் தேர் தலில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணியை எதிர்த்து மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி, நிறுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஹாரில் சுமார் 15 வருடங்கள் நடைபெற்ற ஆர்ஜேடி ஆட்சியில் கால்நடை தீவன ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான ஒரு வழக்கில் லாலுவுக்கு தண்டனை வழங்கப்பட்டது. மேலும் பல வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், சிபிஐ நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு விசாரணை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

42 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்