திருப்பதி ஏழுமலையானை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தரிசித்தார். முன்னதாக புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தையும் திறந்து வைத்தார்.
ஆந்திர மாநில புதிய தலைநகர் அமராவதிக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தார். அவரை மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அங்கு ரூ.190 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘கருடா விமான நிலையத்தை’ அவர் திறந்து வைத் தார். பின்னர் விமான நிலையம் அருகே புதிதாக கட்டப்பட உள்ள 4 செல்போன் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து சாலை வழியாக திருமலைக்கு சென்ற பிரதமர், பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்பு மாலை 6 மணியளவில் ஏழுமலையான் கோயிலுக்கு முகப்பு கோபுர வாசல் வழியாக சென்ற பிரதமருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
அப்போது சுவாமியை தரிசனம் செய்த பிரதமருக்கு வேத பண்டிதர்கள் ரங்கநாயக மண்டபத்தில் சிறப்பு கவுரம் அளித்தனர். பின்னர் அவருக்கு தீர்த்த பிரசாதங்களும், நினைவு படங்களும் வழங்கி கவுரவித்தனர். பிரதமர் வருகையை முன்னிட்டு வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதமருடன் ஆளுநர் நரசிம்மன், முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, நிர்மலா சீதாராமன் மற்றும் மாநில அமைச்சர்கள், அரசு மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் இருந்தனர். பிறகு அங்கிருந்து கார் மூலம் ரேணிகுண்டா சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago