டிசம்பர் 25-ம் தேதி வாஜ்பாய் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநில விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25 அன்று, உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் 'கிசான் சம்வாத்' நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உ.பி. விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்த்த உள்ளார்.
இதுகுறித்து உ.பி. மாநில பாஜக வெளியிட்ட அறிக்கை:
''முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உ.பி. விவசாயிகளுடன் கலந்துரையாட உள்ளார். அன்றைய தினம் உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 2,500க்கும் மேற்பட்ட இடங்களில் 'கிசான் சம்வாத்' (விவசாயிகள் சகாப்தம்) நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளோம்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட மெய்நிகர் கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் உ.பி. பாஜக தலைவர் சுவாதந்திர தேவ் சிங் மற்றும் மூத்த பாஜக தலைவர் ராதா மோகன் சிங் ஆகியோர் பேசினர்''.
இவ்வாறு உ.பி. மாநில பாஜக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மூத்த பாஜக தலைவர் ராதா மோகன் சிங் கூறுகையில், ''பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மோடி அரசு செய்துள்ள அளவுக்கு முன்பிருந்த அரசுகள் நன்மைகள் செய்திருந்தால், விவசாயிகளின் நிலை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்களைப் பரப்புகின்றனர்'' என்று குற்றம் சாட்டினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago