இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது. கரோனாவில் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 95,50,712 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,153 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியை கடந்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 95,50,712 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 95.40 ஆக உள்ளது.
» பிரதமர் மோடியின் வாரணாசி எம்.பி. அலுவலகத்தை ஓஎல்எக்ஸ் தளத்தில் விற்க விளம்பரம்: 4 பேர் கைது
» கோவிட் 19 முன்களப் பணியாளர்களுக்கு இடைக்கால ஓய்வளிக்க சில வழிமுறைகள் தேவைப்படலாம்: உச்ச நீதிமன்றம்
கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,08,751ஆகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 12வது நாளாக கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கரோனா வைரஸால் நேற்று மட்டும் 347 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,45,136 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.
செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20-ம் தேதி 90 லட்சத்தையும் கடந்துள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago