உணவு பதப்படுத்துதல், வேளாண் துறையில் நேரடி அந்நிய முதலீடு வாய்ப்பு: பியூஷ் கோயல்

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய முதலீட்டிற்கு இந்தியாவில் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது என சிஐஐ கூட்டத்தில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே இருதரப்புப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவை அதிகரிப்பது குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பில் ஆலோசிக்கப்பட்டது. இதில் இரு நாடுகள் இடையேயான பொருளாதார உத்தி அறிக்கையை பியூஷ் கோயல் வெளியிட்டார்.

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசியதாவது:

அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை இந்தியா எளிதாக்கியுள்ளதாலும், பல துறைகளை இந்தியா திறந்து விட்டுள்ளதாலும் ஆஸ்திரேலியா, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உணவு பதப்படுத்துதல் துறையில் அதிகளவு முதலீடு செய்ய, வேளாண் துறையையும் நாம் திறந்து விட்டுள்ளோம்.

அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக, அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகளை நாம் தொடர்ந்து மாற்றி வருகிறோம்.

விண்வெளி, அணுசக்தி மற்றும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி போன்ற புதிய துறைகளும் திறந்து விடப்படும்.

வளர்ந்து வரும் பாதுகாப்பு, விளையாட்டு, ஜவுளி, ஆடை வடிவமைப்பு, டிஜிட்டல் விளையாட்டு, அனிமேஷன், நீர் மேலாண்மை, கப்பல் கட்டுமானம், டிஜிட்டல் வழி கல்வி போன்ற துறைகளும் இருதரப்பு வர்த்தக உறவில் சமநிலையை ஏற்படுத்தும்.

இவ்வாறு மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்