தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் டிசம்பர் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்கான வானிலை அறிவிப்பு:
கிழக்கு திசையில் உள்ள காற்றழுத்தம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால், கேரளா , மாஹே மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்குப் பரவலாக இடியுடன் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 18 மற்றும் 19ஆம் தேதி அன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கேரளா மற்றும் மாஹே ஆகிய பகுதிகளில் டிசம்பர் 18ஆம் தேதியும், லட்சத்தீவு பகுதியில் டிசம்பர் 19 மற்றும் 20ஆம் தேதிகளிலும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
» மே.வங்க பாஜக தலைவர்கள் 5 பேரைக் கைது செய்ய இடைக்காலத் தடை: போலீஸாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
» மேற்கு வங்கத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி: தேயிலைத் தோட்ட ஊழியர் கைது
மேற்கு திசையில், புதிய லேசான காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, மேற்கு இமயமலைப் பகுதியில் டிசம்பர் 20 மற்றும 21ஆம் தேதிகளில் லேசான மழை மற்றும் பனிப் பொழிவுக்கு வாய்ப்புள்ளது.
இரண்டாவது வாரத்தில் மழை : (2020 டிசம்பர் 24 முதல் 30 வரை)
மேற்கு இமயமலைப் பகுதியில் மழை, பனிப்பொழிவு இயல்பாக இருக்கும். கிழக்கு திசை காற்றழுத்தம் காரணமாக, தெற்கு தீபகற்ப பகுதியில் இயல்பான மற்றும் இயல்புக்கு அதிகமான மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago