பாதுகாப்பு குறித்த நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் சீனா பாகிஸ்தான் அச்சுறுத்தலை எதிர்ப்பது குறித்து விவாதிக்காமல் சீருடை பொத்தான்கள், ஷூ பாலீஷ் குறித்து ஆராய்வதா என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் சபாநாயகருக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த புதன்கிழமை நாடாளுமன்ற குழுவின் கூட்டத்தில் இருந்து வெளியேறினார், தேசிய பாதுகாப்பின் முக்கியமான பிரச்சினைகள் மற்றும் ஆயுதப்படைகளுக்கு செய்யப்பட வேண்டிய வசதிகள் குறித்து விவாதிப்பதற்கு பதிலாக ஆயுதப்படைகளின் சீருடை பற்றி விவாதிப்பதில் நேரம் வீணடிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில் இருந்து ராகுல் காந்தி வெளிநடப்பு செய்தது முற்றிலும் நியாயமானது. மேலும் குழுக்கூட்டத்தில் ராஜாங்கத்தின் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விவாதித்திருக்க வேண்டும்.
» அயோத்தியில் முஸ்லிம்களுக்கான 5 ஏக்கர் நிலத்தில் மசூதி: குடியரசு தினத்தன்று அடிக்கல் நாட்டு விழா
நாடாளுமன்ற கூட்டுக் குழு செயல்பாடுகள் குறித்து மக்களவை சபாநாயகர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சீனா-பாக்கிஸ்தான் நம்மை மூச்சுத் திணற செய்கின்றன. இந்நாடுகளின் கூட்டு அச்சுறுத்தலை எதிர்ப்பதற்கான வழிகளில் விவாதம் நடந்திருக்க வேண்டும், சீருடையின் பொத்தான்கள் மற்றும் காலணிகளில் பயன்படுத்த வேண்டிய போலிஷ் வகை குறித்து விவாதித்துள்ளனர். அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்துள்ள விவாதம் முற்றிலும் அபத்தமானது.
ராஜாங்கத்தின் பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் நமது படைகளின் அவசர தேவைகள் குறித்தும் விவாதித்திருக்க வேண்டும், ராணுவ வீரர்களின் காலணிகளையும் பொத்தான்களையும் எப்படி மெருகூட்டி பிரகாசிக்க செய்யவேண்டும் என்பது பற்றி அல்ல.
நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆயுதப்படைகள் பற்றி எந்த அறிவும் இல்லாத அரசியல்வாதிகள் இந்த குழுவில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள்தான் இந்த தேசத்தைப் பாதுகாப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாடாளுமன்ற குழுவின் செயல்பாட்டை அரசியல் பின்புலங்கள் வழிநடத்துகின்றன என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவது உள்ளிட்ட தேசத்தின் மிகப்பெரிய பிரச்சினைகள் தனியே விவாதிகப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய பாதுகாப்பு கமிட்டி கூட்டங்கள் நடத்தப்படுவது என்பதை தலைவர் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் ஒன்றுமில்லாத அற்பமான பிரச்சினைகளையெல்லாம் விவாதம் நடந்துள்ளது. இத்தகைய ஒரு கூட்டத்திலிருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியேறியது முற்றிலும் நியாயமானது.
இவ்வாறு அமரிந்தர் சிங் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago