கரோனா வைரஸ் பரவல் எதிரொலி: வேலையிழப்பு, சம்பள குறைப்பால் வீடுகளில் சேமிப்பு கடும் பாதிப்பு

கரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வேலையிழப்பு மற்றும் சம்பள குறைப்பு காரணமாக வீடுகளில் சேமிக்கும் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இதன் தாக்கம் பரவியுள்ளது.

இதன் காரணமாக செலவழிக்கும் அளவும் வெகுவாகக் குறைந்துள்ளது. வேலையிழப்பு அல்லது சம்பள குறைப்பு காரணமாக நுகர்வோர் செலவழிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பெருமளவு குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுகர்வோர் சார்ந்த கணக்கீட்டில் 8,240 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் 68 சதவீதம் பேர் கடந்த 8 மாதங்களில் தங்களது சேமிப்பு வெகுவாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் செலவிடும் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் அடுத்த நான்கு மாதங்களில் மேற்கொள்ள உள்ள செலவினங்களும் மார்ச் 2021-ல் சேமிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் 10 சதவீதம் பேர்தான் அடுத்த நான்கு மாதங்களில் ரூ.50 ஆயிரம் தொகைக்கு மிகவும் அத்தியாவசிய செலவுகளை செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 21 சதவீதம் பேர் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் செலவிட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

58 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்